Friday, October 14, 2011

கணிணி இல்லையா?. கால்நடைதான்

முன்பெல்லாம் விமானப்பயணம் என்பது பெரிய பணக்காரர்கள் மட்டுமே மேற்கொள்ளக்கூடிய பயணமாக இருந்து வந்தது. சரி, இப்போது என்ன, அது ஏழைகளின் வாகனமாக மாறி விட்டதா?. அதுதான் இல்லை. மாறாக இதுவரை ஏழைகளின் வாகனமாக இருந்து வந்த ரயில் பயணம், பஸ் பயணம் ஆகியவையும் இப்போது பணக்கார்களின் வாகனமாக ஆகிவிட்டது. விமானப்பயணம் செல்ல வேண்டுமானால் அதிக பட்சம் ஒரு ட்ராவல் ஏஜென்ஸியை அணுகினால் போதும். ஆனால், ரயில் பயணம், (இப்போது பஸ் பயணமும் சேர்ந்துகொண்டது. உபயம்: இன்றைய த்மிழ்நாடு அரசு) செல்ல வேண்டுமானால் முதலில் கம்ப்யூட்டர் வாங்க வேண்டும். நீங்கள் கம்ப்யூட்டர் ஆப்பரேட் பண்ண கற்றுக்கொள்ள வேண்டும், அடுத்து இண்ட்டர்நெட் கனெக்ஷன் வாங்க வேண்டும். அதன்பிறகே ரயில் பயணம் அல்லது பஸ் பயணம் செல்ல வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் காரணம், இந்த வசதிகொண்டவர்கள் வீட்டில் உட்கார்ந்தபடியே செய்துகொள்ளும் 'ஆன்லைன் புக்கிங்'. சரிப்பா, வசதி படைத்தவர்களுக்கு கால் நோகாமல் புக்கிங் செய்துகொள்ள இந்த வசதிகளை அறிமுகப்படுத்தினாலும், அதுக்கு பாதி இடங்களை ஒதுக்கிக்கொண்டு, பாதி இடங்களையாவது ரயில்வே ஸ்டேஷனில் கியூவில் கால்கடுக்க நிற்கும் அன்றாடங்காய்ச்சிக்கு ஒதுக்கலாமல்லவா?. அதை செய்ய மாட்டார்களாம்.
ஊருக்குச் செல்வதற்காக கால்கடுக்க நெடுந்தூரம் மக்கள் கியூவில் நிற்கும்போது, கவுண்ட்டரைத் திறந்ததும் இரண்டே பேருக்கு கொடுத்து விட்டு 'ஃபுல்' ஆகிவிட்டது என்று அறிவித்ததும் ஏமாற்றத்தோடு செல்கிறானே அந்த ஏழையின் முகத்தை எந்த அரசியல்வாதியாவது நினைத்துப்பார்க்கிறானா?. அவனும் ஓட்டுப்போட்டுத்தானே நீ வந்து உட்கார்ந்தாய்?.

பண்டிகைக்காலங்களுக்கு சிறப்பு ரயில் என்று தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் அறிவிப்பார்கள். அதைப்பார்த்துவிட்டு அதிகாலையிலேயே விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் கால்கடுக்க கியூவில் நிற்பவனுக்கும் அதே கதிதான். கவுண்ட்டரைத்திறக்கும்போதே 'ஃபுல்' என்று அறிவிப்பார்கள். அதாவது அத்தனை டிக்கட்டுகளையும் 'ஆன்லைன்' சோம்பேறிகள் வாங்கி விட்டார்களாம். ஏழை, நடுத்தரவாதிக்கு பட்டை நாமமாம்.
சரி, இதுவரை ரயில் பயணத்தில்தான் இந்த மோசடி, ஏமாற்றம் என்றால், இப்போது பேருந்திலும் ஆன்லைன் புக்கிங்கை துவக்கி வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. ரயில் டிக்கட் கிடைக்காவிட்டால் பஸ்ஸிலாவது போகலாம் என்று எண்ணியிருந்த ஏழை வாயில் மண் விழுந்து விட்டது. இனிமேல் கம்ப்யூட்டர் பிரகஸ்பதிகள், ரயில் டிக்கட் 'ஃபுல்' ஆனதும் பஸ் டிக்கட்டையும் வளைத்துப்போட்டு விடுவார்கள். இதில் இன்னொரு பெரிய மோசடி, 'ஆன்லைன்' புக்கிங் மூலம் பெருவாரியான டிக்கட்டுகளை ட்ராவல் ஏஜெண்ட்டுகள் புக் பண்ணி வைத்துக்கொண்டு, கடைசி நேரத்தில் வருவோரிடம் ஒண்ணுக்கு நாலாக கட்டணம் வசூலிப்பதுதான்.
இப்படி பல்வேறு வழிகளிலும் மோசடி நடக்கும் இந்த 'ஆன்லைன்' புக்கிங் தேவையா?. தேவையில்லையெனில் ஓட்டுப்போட்ட மக்கள் ஏன் சும்மாயிருக்கிறீர்கள்". ரயிலில் ஆன்லைன் புக்கிங்கை நீக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்றும். பஸ்ஸில் ஆன்லைன் புக்கிங்கை ஒழிக்க வேண்டுமென்று சட்டமன்றத்திலும் குரல் கொடுக்க வேண்டுமென்றும் உங்கள் எம்.பி.க்களையும், எம்.எல்.ஏ.க்களையும் நிர்ப்பந்தியுங்கள். அப்படி குரல் கொடுக்காவிட்டால் அடுத்த கூட்டத்தொடர் முடிந்தபின் அவர்கள் வீடுகள் இருக்கும் இடங்கள் வெறும் மணல் மேடாகும் என்று எச்சரியுங்கள். முடிந்தால் அவர்களை தெருவில் இழுத்துப்போட்டு சாத்துங்கள். தப்பேயில்லை.
கேட்க பயமாக இருக்கிறதா?. கணிணி இல்லாதோர் இப்போதே குடும்பத்தோடு கால்நடைப்பயணம் துவங்குங்கள். இந்த தீபாவளிக்குப்புறப்பட்டால், அடுத்த தீபாவளிக்காவது திருநெல்வேலி போய்ச் சேர்ந்து விடலாம்.

12 comments:

 1. உங்கள் பின்னுட்டத்தை பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன் . நேரம் இருந்தால் பார்க்கவும்
  http://manasaali.blogspot.com/2011/11/03.html

  ReplyDelete
 2. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  எனது ப்ளாக்கில்:
  பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
  புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
  A2ZTV ASIA விடம் இருந்து.

  ReplyDelete
 3. அருமையான கருத்து. கம்ப்யூட்டரில் ஆன்லைன் புக்கிங் செய்ய என் போன்றவர்கள் முயன்றாலும் பேமெண்ட் செய்ய க்ரெடிட் கார்டு தேவைப்படுகிறது. எத்தனை சிக்கல்கள் நடைமுறையில்? இதைப் பயன்படுத்திக் கொள்ளையடிப்பவர்களை அவசியம் தடுத்தாக வேண்டும். நல்ல விஷயத்தை உரக்கச் சொல்லியிருக்கிற தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. சாரதா அவர்களுக்கு சிவாஜி படம் பற்றி மட்டுமே எழுத தெரியும் என்று நான் நினைத்திருந்தேன். உங்களின் இந்த வலைப்பூ எனக்கு சிறிது ஆச்சர்யத்தை கொடுத்தது. நன்றாகவே சிந்திக்கிறீர்கள். உங்கள் எழுத்து, நடை, சிவாஜி பற்றி சொல்லும் போது காட்டும் பிரம்மிப்பு, பழைய படங்களையும் நடிகர்களையும் விமர்சிக்கும் நேர்த்தி,குறிப்பாக பழைய பாடல்களை குறித்து நீங்கள் எழுதும் அழகு, ஜெய்ஷங்கர் பற்றி சொல்லிய கருத்துக்கள் எல்லாமே எனக்கு அடடா இப்படியும் ஒருவரா என்று வியப்பை கொடுத்தது. நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று இன்றுதான் அதை செய்ய முடிந்தது.

  ReplyDelete
 5. Hello,

  I saw your comment about Padmini's marriage at
  http://www.mayyam.com/talk/showthread.php?9590-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-7&p=642363&viewfull=1#post642363. I could not find that thinathanthi photo in your blog. I'm a huge Padmini fan and would really like to see it. Could you email it to me at pappimma01@gmail.com? Thanks so much - I'd really appreciate it.

  ReplyDelete
 6. நல்ல பகிர்வு...

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
  Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/5.html) சென்று பார்க்கவும்...

  நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... தொடர்ந்து எழுதவும்... நன்றி...

  ReplyDelete
 7. வலைச்சரம் மூலம் உங்கள் வலைப்பதிவுக்கு வருகிறேன். எங்கள் வீட்டிலும் எல்லோரும் சிவாஜி ரசிகர்கள் தான்.

  உங்கள் அலுப்பும் கோபமும் புரிகிறது. எனக்கு ஆன்லைன் புக்கிங் எல்லாம் தெரியாது.சிம்பிள்.காரணம் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.

  ReplyDelete
 8. சகோதரி சாரதா அவர்களுக்கு, வணக்கம். தங்களின் பதிவு வந்து நீண்ண்ண்ண்ட நாட்களாகிவிட்டது.

  உடல் நிலை மற்றும் வீட்டில் அனைவரும் நலம் என்றே நம்புகிறேன்.

  அன்புடன்

  நாகராஜன்

  ReplyDelete
 9. வித்தியாசமான பார்வை..
  ஆனால் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை எல்லா மட்டத்தினருக்கும் எடுத்துச்செல்லும் வழிதான் புகை வண்டி மற்றும் பேருந்துக்கான வலையில் சீட்டு வாங்கும் வசதி.

  அதை திருட்டு வழியில் பயன்படுத்துவதைத் தவிர்க்க நியதிகள் கொண்டு வரலாமே தவிர அதை நீக்கு என்று சொல்வது மக்களைப் பின்னோக்கிச் செல்லச் சொல்லும் ஒரு செயல்.

  நீங்கள் கடைசியாச் சொல்லும் தீர்வும் பின்னோக்கிய பார்வைப் படிதான் இருக்கிறது..இனி எல்லாப் பயணத்திற்கும் நடப்பீர்களா என்ன?

  ReplyDelete
 10. remove the word verification in comment setting; no body will comment if you retain it.. :)

  ReplyDelete
 11. வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html?showComment=1392506757030#c2810563175120508250

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 12. I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
  Nice One...
  Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News

  ReplyDelete