Friday, March 18, 2011

மாற்றம் வருமா...?.

பின்னூட்டம் இட்ட Bale Bale, Story Teller, Ganpat ஆகியோருக்கு நன்றி. (பின்னூட்டங்களுக்கான பதிலை பதிவாகவே இட்டிருக்கிறேன்)

கன்பத்,

தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல முதல்வர் வரவேண்டும் என்ற ஆதங்கம் இல்லாமலில்லை. ஆனால் அதற்கான விழிப்புணர்வு மக்களிடம் இல்லையே. 'பேயை விட்டால் பிசாசு' என்ற நிலையில்தானே இருக்கிறோம். அந்த அளவுக்கு பாமர மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு விட்டனரே.

இன்றைக்கே, கறைபடியாத கட்சிகளை ஒன்று சேர்த்து, மூன்றாவது அணியை உருவாக்கி, அதன் முதல்வர் வேட்பாளராக திரு. இல. கணேசன் அவர்களை அடையாளம் காட்டி நிறுத்தினால் எத்தனை பேர் வாக்களிப்பார்கள்?. தமிழக அளவில் பாரதிய ஜனதா அப்பழுக்கற்ற கட்சியாக இருந்தாலும், அகில இந்திய அளவில் அதுவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான கட்சிதானே. உதாரணம், நம் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கும் எடியூரப்பா. பதவிக்கு வந்த கொஞ்ச நாளிலேயே பல ஊழல் குற்றச்சாடுக்கு ஆளாகி விட்டாரே.

அதற்காக எடியூரப்பாவையும், இல கணேசனையும் ஒரே தராசில் வைத்து நிறுக்க விரும்பவில்லை. அது நியாயமும் அல்ல. அதே சமயம். கட்டுக்கட்டாக பணத்தை உள்ளே எடுத்து வைக்கும் பங்காரு லக்ஷ்மணன் வீடியோவையும் மறந்துவிட முடியவில்லை. என்ன செய்வது?. அரசியல் என்று வரும்போது எந்தப்பக்கம் திரும்பினாலும் ஊழலற்ற தன்மையைப் பார்க்க முடியவில்லை.

எனவே மக்கள் தயாராக வேண்டியது ஒரு விஷயத்துக்கு மட்டுமே. 'அறவே திருடாதவனைத்தேடி அலையாதே (அந்தப்பெருமையை காமராஜர் கொண்டு போய்விட்டார்). மொத்தமாக திருடுபவனை விட, கொஞ்சமாக திருடுபவனைக் கொண்டுவா. அவன் திருடியது போக நமக்கு மிச்சமாவது இருக்கும்' என்பதுதான்.

திரு. இல. கணேசனை முதல்வராக ஒருமுறை வைத்துப்பார்த்தால் என்ன என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படுவதில் தவறில்லை. சமையல்காரரை மாற்றிப்பார்ப்போமே, நாக்குக்கு சுவையிலாவது ஒரு மாற்றம் கிடைக்கட்டும். ஆனால் அது சாத்தியமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஏனென்றால் இன்னமும் பல தொகுதிகளில் பாரதிய ஜனதாவினர், செல்லாத ஓட்டுக்களைவிட குறைவாகவே வாங்கிக்கொண்டிருக்கின்றனர். 

4 comments:

 1. Dear சாரூ,

  இந்திய அரசியல்,மற்றும் அரசியல்வாதிகள் பற்றி குறை சொல்ல ஒரு கோடி விமரிசகர்கள் உள்ளனர்.ஆனால் தீர்வு என்ன என்று சொல்ல ஒரு சிலர் கூட இல்லை.உதாரணத்திற்கு திரு சோ ராமசாமியை எடுத்துக்கொள்வோம்.கடந்த 40ஆண்டுகளாக துக்ளக் இதழ் வாயிலாக தமிழக அரசியலில் உள்ள குறைகளை அக்கு வேறு ஆணி வேறாக எழுதி வருகிறார் இதனால் என்ன பயன்?நிலைமை மேல் மேலும் மோசம அடைந்ததை விட?ஒரு தடவையாவது அவர் இதற்கு தீர்வு என்ன என சொல்லியிருக்கிறாரா?
  என்னைப்பொறுத்தவரை நம் இந்திய அரசியல் சாசனம் மற்றும் குற்றவியல் சட்டங்களில் பெரிய மாற்றம் ஏற்படுத்தாது இந்திய அரசியலை மாற்ற முடியாது.நீங்கள் குஜராத்,பீகார் என்று உதாரணம் சொல்லலாம்.ஆனால் அவையெல்லாம் exceptions/flukes; can not be taken as rules!
  ஒரு சிறு கேள்வியுடன் இந்த சர்ச்சையை ஆரம்பிக்கிறேன்.திருமதி சாரதா நேர்மையானவர்.தொண்டுள்ளம் கொண்டவர்.தேசப்பற்று மிக்கவர்.அவரை சுயேச்சையாக ஒரு தொகுதி MLA ஆக்குகிறோம் என
  வைத்துக்கொண்டால்,அவரால் என்ன சாதிக்க முடியும் என நினைக்கிறீர்கள்?
  நன்றி
  (இன்று நீங்கள் எனக்கு ரக்ஷாபந்தன் எப்போ கட்டுகிறீர்கள்?)

  ReplyDelete
 2. Saradha madam, your thought to give Mr. Ganeshan a chance is not a bad idea at all. We have no option other than DMK and ADMK and these two parties as you said "Pei and Pisasu". We need to have a new face and party to rule TN other than these two ghost. But I doubt people mind will change sooner or later. Any how if common people think and vote otherthan DMK and ADMK in big will make some slow progress.

  Thanks,
  Sathish

  ReplyDelete
 3. வணக்கம் அம்மா கூகிலில் எதோ தேடப்போக உங்கள் தளம் கிடைத்தது,நன்றாக எழுதுகிறீர்கள்,60,70கள் நான் அதிகம் அறியாதவை.உங்கள் எழுத்து மூலக் அக்காலத்து சினிமாவை வாசிக்க முடிகிறது.
  மேலும் தொடர்க.
  www.geethappriyan.blogspot.com

  ReplyDelete
 4. டியர் கன்பத்

  தங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் சொல்வது உண்மை. தவறுகளைச் சுட்டிக்காட்ட நிறைய பேர் இருந்தாலும், நிவாரணம் சொல்ல சிலராவது முன்வர வேண்டும். அந்த நிவாரணங்களையும் பரீட்சாத்த முறையில் செயல்படுத்திப்பார்க்க, சமுதாயம் பக்கபலமாக துணை நிற்க வேண்டும். 'இதையெல்லாம் செய்ய யாரோ இருக்கிறார்கள், அது நம் வேலையல்ல' என்ற மனநிலை மக்களிடம் மாறினாலொழிய, மாற்றங்கள் என்பது கானல்நீரே.

  டியர் சதீஷ்
  உங்கள் ஆதங்கம் போற்றற்குரியது. ஏதேனும் நடந்தேயாக வேண்டும். இல்லையெனில், ஜனநாயகத்தின் நிலைமை கவலைக்கிடமாகிவிடும்.

  டியர் கீதப்பிரியன்,
  தங்கள் வருகைக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள். பதிவுகளில் குறைகளிருப்பின் தயங்காமல் சுட்டுங்கள்.

  நன்றியுடன்... சாரூ...

  ReplyDelete