Saturday, April 30, 2011

நூற்றுக்கு நூறு

இந்தியாவில் திரைப்பட சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'தாதாசாகேப் பால்கே' விருது அளிக்கப்பட்டிருக்கும் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் இப்பதிவு சமர்ப்பணம்.

கல்லூரிப்பேராசிரியர் மீது, தங்களிடம் தவறாக நடந்துகொண்டதாக களங்கம் சுமத்தும் மூன்று மாணவிகள். அதன்காரணமாக அவரை விட்டு விலகிப்போகும் அவரது காதலி. ஒழுக்கமானவர் என்று கருதப்பட்ட பேராசிரியர் எவ்வளவு கீழ்த்தரமானவர் என்று வசைபாடும் மாணவிகளின் பெற்றோர், அவரை சந்தேககக்கண்ணொடு பார்க்கும் கல்லூரி நிர்வாகம். அவர்மீது கொஞ்சமும் கருணை காட்டாத சமுதாயம். இத்தனை தடங்கல்களையும் உடைத்தெறிந்து தான் எந்த வித அப்பழுக்கும் இல்லாத பத்தரை மாற்றுத்தங்கம் என்பதை நிரூபிக்கும் கல்லூரி பேராசிரியரின் கதையை தனக்கே உரித்தான பாணியில் சொல்லி நம்மைக் கவந்திருந்தார் இயக்குனர் சிகரம்    கே.பாலச்சந்தர்.

இப்படியும் கூட தன்னால் நடித்து மக்களை ஆச்சரியப்படுத்தத் தெரியும் என்று நிரூபித்துக்காட்டினார் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். வழக்கமாக ஆக்ஷன், அடிதடி, க்ரைம், நகைச்சுவை என்று மட்டுமே நாம் பார்த்துப்பழகியிருந்த ஜெய், தான் ஏற்றிருந்த கணிதப்பேராசிரியர் கதாபாத்திரத்தில் தூள் கிளப்பியிருந்தார். (அவர் மேலுள்ள மரியாதையை அதிகப்படுத்துவது போல அவர் அணிந்திருக்கும் கண்ணாடி). அவர் மீது களங்கம் சுமத்தும் மாணவிகளாக வரும் விஜயலலிதா, ஜெய்குமாரி, ஸ்ரீவித்யா ஆகியோர் தன் மீது அபாண்டமாகவே பழி சுமத்துமின்றனர் என்று தெரிந்தும், அவர்கள் உதவிக்குப்போய் அவர்களின் பிரச்சினைகளை களைந்து, தன்னையும் உத்தமன் என்று நிரூபிக்குமிடத்தில் இமயமாக உயர்ந்து நிற்கிறார் ஜெய்.

அவரது காதலியாக வரும் லட்சுமி, தன் காதலரான பேராசிரியர் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை, தன் கண்முன்னே நடக்கும் சம்பவங்களால் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போகுமிடங்களில் தனக்கே உரித்தான அசாத்தியமான தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பேராசிரியரை நம்புவதா, அவர்மீது கூறப்படும் பழிகளை நம்புவதா என்று தவிக்குமிடங்களில்.... வாவ்... லட்சுமி, தானும் ஒரு காட்வின் ஆஸ்டினாக விஸ்வரூபம் எடுக்கிறார்.

எந்தக்கல்லிலும் தன்னால் சிலைவடிக்க முடியும் என்று கே.பி. நிரூபிக்கும் இன்னொரு அம்சம், அவர் விஜயலலிதாவிடம் பெற்றிருக்கும் நடிப்பு. அதுவரை கவர்ச்சிப்பாவையாகவே தமிழ்த்திரை யுலகம் பயன்படுத்தி வந்த விஜயலலிதாவை, இப்படியெல்லாம் கூட நடிக்கவைத்து அசத்தமுடியும் என்று காட்டியிருக்கிறார். ஆம், பசுமாட்டில் பால கறக்கத்தெரிந்தவன் சாமர்த்தியசாலியில்லை. காளைமாட்டிலும் பால்கறக்கத்தெரிந்தவனே திறமையாளன். அதில் கே.பி. கைதேர்ந்தவர். அதுவரை சின்னச் சின்ன ரோல்களில் மட்டுமே நடித்து வந்த ஸ்ரீவித்யாவுக்கு, இதில் கனமான ரோல். அவரும் நன்றாக செய்திருந்தார். ரோல்தான் கனமே தவிர அவர் கனமாக ஆகாதிருந்ததால் மாணவி என்று நம்ப முடிந்தது. (அற்புதமான நடிகையை ரொம்ப சீக்கிரம் இழந்துட்டோமோ என்று நினைக்கும்போது நம் மனம் கனக்கிறது). ஜெய்குமாரியும் ஈடு கொடுத்து நடித்திருந்தார். கல்லூரி பிரின்ஸிபாலாக கௌரவ வேடத்தில் ஜெமினி கணேஷ் வந்து போனார்.

படத்தில் இயக்குனரின் குரலாக வந்தவர் நாகேஷ். வழக்கமாக இயக்குனர்கள் தாங்கள் சொல்ல வரும் கருத்துக்களை இவர் மூலமாகச்சொல்வது வழக்கம். பேராசிரியர்மீது களங்கம் சுமத்துவோர் முன் ஒரு பெரிய வெள்ளைப்பேப்பரில் கருப்புப்புள்ளி வைத்து "இப்போ உங்களுக்கு என்ன தெரிகிறது?" என்று கேட்க, அவர்கள் "கருப்புப்புள்ளி" என்று சொன்னதும் "அதானே பார்த்தேன். அதைச்சுற்றி இவ்வளவு பெரிய வெள்ளை பேப்பர் இருப்பது கண்ணுக்குத்தெரியாதே. சின்ன கருப்புப்புள்ளி மட்டும்தானே தெரியும். அந்த அளவுக்கு எல்லோருக்கும் குறுகிய எண்ணம். அதனால்தான் எங்கள் பேராசிரியர் மேல் களங்கம் சுமத்துறீங்க" என்று மடக்குமிடத்தில் நமக்குத்தெரிவது நாகேஷ் அல்ல, பாலச்சந்தர்.

(காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் பேசும் வசனம் நினைவிருக்கிறதா?

"We don’t see Tamil films, we will see only English films. அதாவது இங்கிலீஷ் படம் மட்டும்தான் பார்ப்போம்னு சொல்லிக்கிறது இப்போ ஃபேஷனா போச்சு. என் படம் வந்தால்தான் இந்த நிலைமையே மாறும். நீங்க வேணா பாருங்க. ஒவ்வொருத்தனும் சொல்லப்போறான். We dont see English films, we want only Tamil filmsனு. இது நடக்குதா இல்லையான்னு பாருங்க" என்ற வசனம் வருமே, அது நாகேஷா பேசினார்?. அவர் உடம்புக்குள் புகுந்துகொண்டு இயக்குனர் ஸ்ரீதர் பேசியதுதானே).

1971-ல் நூற்றுக்கு நூறு படம் வெளியானதிலிருந்து, அந்த ஆண்டு முழுக்க எப்போ விவித் பாரதி வானொலியைத் திறந்தாலும் சுசீலாவின் ஒரு பாடல் தவறாமல் ஒலிக்கும். "நான் உன்னை வாழ்த்திப்பாடுகிறேன், நீ வரவேண்டும்" என்ற அந்தப்பாடல் இன்றுவரை எங்காவது ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. 'கலைமாமணி' வி.குமார் இசையில் உருவாகி, ஒவ்வொரு வருடப்பிறப்பன்றும் தவறாமல் ஒலிக்கும் இப்பாடல், படத்தில் விஜயலலிதா பாடுவதாக வரும். இப்பாடலில் அவருடைய சற்று வித்தியாசமான நடன அசைவுகள் கண்களுக்கு விருந்து.

ஜெய்சங்கர் பல்வேறு பெண்களுடன் டூயட் பாடுவதாக லட்சுமி கற்பனை செய்துபார்க்கும் பாடல் "நித்த நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் நான் தேடினேன்" பாடலை ஜெய்யின் குரலாகவே டி.எம்.எஸ். பாடி அசத்தியிருப்பார். பாடலின் முடிவில் லட்சுமியின் மதிப்பில் ஜெய் '0/100' என்று காட்டும் இடத்திலும்,

பாதிப்படம் முடிந்து இடைவேளையின்போது 'இடைவேளை' கார்டுக்கு பதிலாக '50/100' என்று காட்டுமிடத்திலும், கே.பி. என்ற மனிதர் எப்படி எல்லாவற்றையும் வித்தியாசமாகவே சிந்திக்கிறார் என்று தோன்றும்.

கல்லூரி மாணவர்களுடன் பிக்னிக் போகுமிடத்தில், ஜெய் பாடும் "நானும் மாணவன்தான்" என்ற பாடல் சாத்தனூர் அணைக்கட்டில் படமாக்கப்பட்டிருந்தது. இந்த பிக்னிக்கிலிருந்துதான் வில்லங்கமே துவங்கும்.

மக்கள் கலைஞர் ஜெய் என்ற கலைஞனுக்குள்ளிருந்த இன்னொரு திறமையை நமக்கு கே.பாலச்சந்தர் வெளிப்படுத்திக் காட்டிய 'நூற்றுக்கு நூறு' திரைப்படம் குடும்பத்தினர், பெண்கள், இளைஞர்கள், அலுவலகம் செல்வோர், மாணவ மாணவியர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த வெற்றிப்படமாக அமைந்தது. இன்றைக்கும் இப்படத்துக்கென தனி ரசிகர்கள் உள்ளனர்.

7 comments:

  1. ம்ம்ம்..
    41 ஆண்டுகள் ஓடிவிட்டன
    எதோ நேற்று பார்த்து போல எழுதியுள்ளீர்கள் M'am!
    எப்படித்தான் முடிகிறதோ!!

    ஸ்ரீதர்,பாலசந்தர்,மகேந்திரன்,பாரதிராஜா தமிழ் சினிமாவை நன்கு திசைகளில் பவனி வரசெய்தனர்.
    பரிசு ஒரு இமயத்திற்குதான் தரப்பட்டிருக்கிறது.
    மகிழ்வோம்! வாழ்த்துவோம்!!

    ReplyDelete
  2. மன்னிக்கவும்!
    ஸ்ரீதர்,பாலசந்தர்,மகேந்திரன்,பாரதிராஜா தமிழ் சினிமாவை நான்கு திசைகளில் பவனி வரசெய்தனர்.
    என்று இருக்கவேண்டும்

    ReplyDelete
  3. கன்பத்,
    பின்னூட்டப்பதிவுக்கு நன்றி. சில திரைப்படங்கள் நம் மனதில் தங்கி விடும். அப்படிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

    நீங்கள் சொல்லியிருப்பதுபோல மிகத்தகுதியான ஒருவருக்கு வழங்கப்பட்ட தகுதியான விருது. அக்காலத்தில் பலர் படமாக்கத்துணியாத பல சர்ச்சைக்குரிய கதைகளை துணிந்து படமாக்கி, மற்றவர்களுக்கு புதிய கதவைத்திறந்துவிட்டவர் கே.பாலச்சந்தர். அவருக்குக்கிடைத்த இந்த விருதால் தமிழ்த்திரையுலகமே பெருமையடைகிறது.

    (btw, மோகமுள் திரைப்பட விமர்சனத்தை யாரும் கண்டுகொள்ளவில்லையே)

    ReplyDelete
  4. Dear சாரு,
    //(btw, மோகமுள் திரைப்பட விமர்சனத்தை யாரும் கண்டுகொள்ளவில்லையே)//
    உண்மை!.இப்போ ப்ளாக் நடத்துவதே ஒரு தர்மத்திற்குத்தான்.சீரியஸ்ஸா,நல்லா எழுதற எதுக்கும் பின்னூட்டம் வருவது குறைவு.Silly matters,Controversial matters இவைதான் வரவேற்கப்படுகின்றன.பல நல்ல ப்ளாக்கர்கள் இப்போ இருக்குமிடம் தெரியவில்லை
    தற்போதைய hot topics
    சாய் பாபா - யார்?
    ரஜினிக்கு என்ன உடம்புக்கு?
    ஒசாமா சாகவில்லை- ஒரிசாவில் இருக்கிறார்!
    தோனி பணம் வாங்கினாரா?

    ReplyDelete
  5. கன்பத்,

    உங்கள் கூற்று ஒப்புக்கொள்ளக்கூடியதே. பரபரப்பை விரும்பும் உலகம்தான் இது. இருந்தாலும் பரபரப்பு எத்தனை நாளைக்கு?. நான் முன்பே சொன்னதுபோல, சுடச்சுட சாம்பார் இருந்தாலும் கூட, இலையின் ஓரத்தில் மூன்று மாதங்களுக்கு முன் செய்த ஊறுகாயும் வைக்கப்படுகிறதே. அதுபோலத்தான் பழைய பதிவுகளும். (சிலசமயம், ஒன்றுமில்லாத நேரங்களில் ஊறுகாயும் கைகொடுக்கும்).

    பரபரப்பு என்பதன் ஆயுள் எவ்வளவு நாளைக்கு?.

    சந்தனக்கட்டை வீரப்பன் கொல்லப்பட்டதை ஐந்து நாட்கள் பேசினோம்... அப்புறம்?.

    பிரபாகரன் மரணச்செய்தி பத்துநாட்களுக்கு பரபரப்பாக உலா வந்தது... அப்புறம்?.

    சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதும் பத்து நாட்களுக்குப்பேசப்பட்டது... அப்புறம்?.

    அடுத்த பரபரப்புக்கு ஓடிவிட்டோம்.

    ReplyDelete
  6. Being a hard core fan of Sivaji, I naturally was attracted to your blog - then, one led to another. I ended up reading all your posts in one go, over a few hours. That you are writing at length on matters other than Sivaji was a bonus. The commentators too make responsible comments and it is a pleasure to go through your writings with apt comments. Good going and best of luck.

    ReplyDelete
  7. Casinos Near Casinos Near Casino York by Wyndham, NY - MapyRO
    Find Casinos Near Casinos Near 부천 출장샵 Casino York by Wyndham, NY near 창원 출장샵 Mohegan 경상남도 출장마사지 Sun 제주도 출장안마 in Norwich, 안동 출장샵 CT.

    ReplyDelete